03:33 மணிக்கு வெளியானது சலார் படத்தின் ட்ரைலர் வெளியானது..!
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பிரசாந்த் நீல் – ஹோம்பலே கூட்டணியில் உருவான KGF போல, சலார் படமும் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைக்கும் விதமாக சலார் ட்ரெய்லர் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் வெளியான சலார் டீசர் செம்ம மிரட்டலாக இருந்தது. அதனை மிஞ்சும் விதமாக சலார் ட்ரெய்லர் இருக்கும் என சொல்லப்பட்டது. இதனால் டிவிட்டரில் சலார் ட்ரெய்லர் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக சலார் ட்ரெய்லர் வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஹோம்பலே ஃபிலிம்ஸ் அப்டேட் கொடுத்துள்ளது. சலார் ட்ரெய்லர் சொன்ன நேரத்தில் வரவில்லை என பயப்பட வேண்டாம்.
மதியம் 03:33 மணிக்கு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு சலார் ட்ரெய்லர் படத்துக்கு பெரிய ஹைப் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.