250 அடி உயரத்தில் கட் அவுட் : பிரபல நடிகரை கொண்டாடவுள்ள ரசிகர்கள்..!

 

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது.வருகின்ற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு 210 பேருடன் படக்குழு அமெரிக்கா சென்று ப்ரோமோஷன் செய்த வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் ராம்சரண்,கியாரா அத்வாணி ,ஸ்ரீகாந்த்,sj சூர்யா,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகன் ராம்சரனிற்கு விஜயவாடாவில் இன்றைய தினம் 250 அடி உயரத்தில் கட் அவுட் வைப்பதற்கான வேலைகள் 25 நாட்களாக நடைபெற்று வருகின்றது.

ராம் சரணின் ரசிகர்களின் வேண்டுகோளிற்கிணங்க இன்று நடைபெறவுள்ள இவ்நிகழ்விற்கு ராம்சரன் மற்றும் தில்ராஜு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இது வரை யாரும் வைக்காத அளவில் இவர்கள் கட் அவுட் வைக்கவுள்ளனர் எனவும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.