விரைவில் அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள "2K Love Story"..!
"நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்" உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.
இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கினார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் விரைவில் அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.