12 வயது குறைவான இளம் நடிகரை மணக்கும் 49 வயதான நடிகை..!!

malaika arora plans to marry arjun kapoor soon
 
 

மலைக்கா அரோரா இரண்டாவது திருமணம் செய்ய தயாராகிவிட்டார். இதுகுறித்து அண்மையில் நடந்த ஒரு நேர்காணலில் அர்ஜுன் கபூருடனான தனது உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புவதாக அவர் சமீபத்திய பேட்டியில் கூறினார்.

49 வயதான மலைக்கா தனது இரண்டாவது திருமணம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். மலைக்கா அரோராவை விட அர்ஜுன் கபூர் 12 வயது இளையவர். இருப்பினும், வயது அவர்களுடைய உறவை பாதிக்காது என்று தெரிவித்துள்ளார். வயது எப்போதும் தங்களுக்கு இடையில் ஒரு தடையாக இருந்தது கிடையாது என்று அவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

எனினும், தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து மக்கள் வெளியிடும் கருத்துகள் மனதை வேதனை அடையச் செய்கிறது. கடவுள் மக்களுக்கு அன்பு நிறைய தர வேண்டும். இனி வருங்காலத்தில் மக்களின் மனம் அப்படியொரு நிலைக்கு மாறும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நேர்காணலில் மலைகா தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் உடனான வாழ்க்கை குறித்து பேசிய அவர், நான் அதிக வணிகத்தை ஆராய விரும்புகிறேன். நான் பயணம் செய்ய விரும்புகிறேன். அர்ஜுனுடன் செட்டில் ஆகி எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நாங்கள் இருவரும் அதற்கு தயாராக இருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் வசூல் நாயகனாக இருப்பவர் சல்மான் கான். இவருடைய இளைய சகோதரர் அர்பாஸ் கான். கடந்த 1998-ம் ஆண்டு அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்தார் மலைகா அரோரா. கடந்த 2017-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது மலைகா தன்னை விட 12 வயது குறைவான அர்ஜுன் கபூரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.