#BIG NEWS : ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம், வைரம், நவரத்தின நகைகள் திருட்டு..!!

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 60 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள் திருட்டு. புகார் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை.  
 

நடிகர் ரஜினிகாந்த் மகளும் திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கணவர் தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா, தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சேர்ந்து போயல் தோட்டத்தில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் தங்கியுள்ளார். முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் திருமணம் நடந்தது. 

அதை தொடர்ந்து ஐஸ்வர்யா, சென்னை செண்ட் மேரீஸ் சாலையில் இருக்கக் கூடிய வீட்டிலும், சி.ஐ.டி காலனியில் இருக்கும் வீட்டியிலும் மற்றும் போயஸ் தோட்டத்தில் இருக்கும் வீட்டிலும் என 3 வீடுகள் மாறியுள்ளார். அப்போது நகைகள் கொண்ட லாக்கரும் மாற்றி வைக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் தான் நகைகள் காணாமல் போயிருக்கும் விஷயத்தை ஐஸ்வர்யா கண்டறிந்துள்ளார். குறிப்பாக வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தினக் கல் என சுமார் 60 சவரனுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போயிருப்பது ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு அவர் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தேனாம்பேட்டை காவல்துறை ஐஸ்வர்யா வீட்டில் இதுவரை பணியாற்றியவர்கள மற்றும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், ஐஸ்வர்யா குடும்பத்தினர் இருந்த 3 வீடுகளிலும் காவல் பணி மேற்கொண்டவர்கள், அவர்கள் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்கள்? லாக்கர் எங்கெல்லாம் மாற்றி வைக்கப்பட்டது? உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதையடுத்து சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. நகைகளை வீட்டுப் பணியாளர்கள் திருடியிருக்கலாம் என சந்தேகிப்பதாக ஐஸ்வர்யா ஏற்கனவே புகாரில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.