7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

 

விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் லலித், அடுத்து தன்னுடைய மகன் அக்‌ஷய் குமாரைக் கதாநாயகனாக ஆக்கியுள்ளார். இந்த படத்துக்கான கதையை   ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் எழுத வெற்றிமாறனின் இணை இயக்குனராக சுரேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது.
 

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விசாரணைக் கைதியை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லும் காவல் அதிகாரியின் கதைதான் இந்த படம் என சொல்லப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் உறவை மையப்படுத்தி இந்த கதையை தமிழ் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ‘எஸ்கார்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.