வெளியான 24 மணிநேரத்திற்குள் சமந்தா படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!! 

 

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடிகையான சமந்தா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யசோதா'. 

இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வாடகைத்தாயாக வரும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடும் சக்தியாக நடித்து அசத்தி இருக்கார் சமந்தா.சர்க்கார் படத்தில் அரசியல் வில்லியாக நடித்து அசத்திய வரலக்‌ஷ்மி சரத்குமார் இந்த படத்தில் கார்ப்பரேட் வில்லியாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

வெளியாகி 24 மணிநேரத்திற்குள் யசோதாவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது.

<a href=https://youtube.com/embed/7rsRx_VtlQU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/7rsRx_VtlQU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">