நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ணுல மண் விழுந்தாலும் கண் திறந்தே  தான் இருக்கணும் - அனல் பறக்கும் வாரிசு ட்ரைலர் வெளியானது..!! 

 

தோழா, மஹரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பொஙகலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் களமிறங்க இருக்கிறது.

இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

<a href=https://youtube.com/embed/9fux9swQ5AQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9fux9swQ5AQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த நிலையில், வாரிசு படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 5 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரெய்லர் வெளியீடப்படும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.