பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை தழுவி வெளியாகும் புதிய படம்..!!
தமிழின் முன்னணி எழுத்தாளரும், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்', 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி ரத்த சாட்சி திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் என்பவர் இயக்கியுள்ளார். ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துவுள்ளார். ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? ஒருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இப்படம் சான்றாகும்.
படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை 'ஆஹா தமிழ்' ஓடிடி தளம் விரைவில் வெளியிட உள்ளது.