இணையத்தில் வைரலாகும் பள்ளி மாணவர்களுக்கு நித்யா மேனன் ஆங்கிலப் பாடம் சொல்லிக்கொடுக்கும் வீடியோ..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் நானி நடித்த வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நித்யா மேனன் 24, ஓகே கண்மணி, மெர்சல், காஞ்சனா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அவர் நடித்த அந்த கேரக்டரை பார்க்கும் போது நமக்கும் ஒரு தோழி கிடைக்காத என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அறம்திருக்கல்பனை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிக்கு சென்ற நடிகை நித்தியாமேனன் அங்கிருந்த அரசு தொடக்கப் பள்ளி ஒன்றிற்க்கு சென்றுள்ளார். அங்கு படிக்கும் மாணவர்களிடம் முதலில் பேச தொடங்கிவிட்டு அனைவரின் நலனையும் விசாரித்தார்.