பிரபல நடிகை மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் நடிகர் கௌதம் கார்த்திக்..!! 

 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் நடிகரானார் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். இதையடுத்து மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

அண்மையில் தான் சமூக வலைதளத்தில் தங்கள் காதல் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கலந்துகொண்டனர். திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி உள்ளனர். தற்போது இவர்களது திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது.

அதன்படி திருமணத்தில் கௌதம் கார்த்திக் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்தும், மஞ்சிமா அவருக்கு மேட்சிங்காக வெள்ளை நிற புடவை அணிந்தும் ஜோடியாக நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

இதேபோல் இயக்குனர்கள் மணிரத்னம், கௌதம் மேனன், நடிகர்கள் ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ஆதி, சிவக்குமார், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, நடிகை நிக்கி கல்ராணி ஆகியோரும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடியை வாழ்த்தினர்.