17 வருடங்கள் கழித்து எடுக்கப்படும் இரண்டாம் பாகத்தில் இணைந்த நடிகை கங்கனா ரனாவத்..!! 

 

 பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறர் என படக்குழு அறிவித்துள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . 'சந்திரமுகி 2' ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடிக்கிறார் என கூறப்படுகிறது.