நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி ?

 

பிரபல நடிகை சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் அவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகர் சைதன்யாவை திருமணம் கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து முழுக்கு போடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தீவிரமாக படங்களில் நடித்து வந்தார்.இருவரும் விவாகரத்து செய்ய போவதாகவும் தகவல் வெளியானது 

இந்நிலையில்  தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக கூறி, சமீபத்தில் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டு, இதற்காக மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்பிக்கையுடன் அவர் வெளியிட்ட பதிவை பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைந்து வர வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்கள்.

இந்நிலையில், சமந்தாவின் உடல் நிலை தற்போது மோசமடைந்து, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, சமந்தாவுக்கு போன் போட்டு உடல்நலம் குறித்து விசாரித்துள்ளாராம். மேலும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.