இனிமேல் எது வேணுமானாலும் நடக்கலாம் - ஆர்.ஜே. பாலாஜி படத்தின் டிரைலர் வெளியானது..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ரன் பேபி ரன்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷமன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'ரன் பேபி ரன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.