இப்படி எல்லாம் ட்ரோல் பண்ணுவீங்களா..!! ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா!! 

 

2016-ல் கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகுந்த பிரபலமடைந்தார்.

2021-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘சீதாராமம்’ படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது இந்தியில் அனிமல், மிஷின் மஞ்சு மற்றும் தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் நடித்து வரும் நிலையில், அதன் முதல் பாடல் ரஞ்சிதமே சில தினங்கள் முன்பு வெளியானது. ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினாலும் ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

பாடலை காபி என சொல்லி சில ட்ரோல் செய்ய, அதில் ராஷ்மிகா கரகாட்டக்காரன் கோவை சரளா போல இருக்கிறார் என ட்விட்டரில் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து ஒரு நீண்ட போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது, “கடந்த சில தினங்களாக, மாதங்களாக.. ஏன் வருடங்களாக கூட எனக்கு ஒரு விஷயம் பிரச்சனையாக இருந்து வருகிறது. நான் பல வருடங்களுக்கு முன்பே இதை பற்றி பேசி இருக்க வேண்டும்.

நான் நடிக்க தொடங்கியதில் இருந்தே ட்ரோல்களை சந்தித்து வருகிறேன். என்னை எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அதற்காக பிடிக்கவில்லை நீ கூறி நெகட்டிவிட்டியை உமிழாதீர்கள்.

நான் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று தான் கடினமாக உழைத்து வருகிறேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி.

நான் சொல்லாத விஷயங்களை கூட வைத்து என்னை ட்ரோல் செய்து அசிங்கப்படுத்துவதை பார்த்து எனக்கு heart breaking ஆக இருக்கிறது.

இதை எல்லாம் ignore செய்ய பலரும் அட்வைஸ் சொல்கிறார்கள், ஆனால் இது எல்லை மீறி போகிறது. ட்ரோல்கள் பற்றி பேசுவதால் நான் யாரையும் ஜெயிக்க விரும்பவில்லை.

“Be kind everyone. We’re all trying to do our best” என பதிவிட்டுள்ளார்.