சினம் கொண்ட சிறுத்தை போல் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார் அருண் விஜய்..!! சினம் படத்தின் ட்ரைலர் வெளியானது..!! 

 

ஹரி இயக்கத்தில் வெளியான 'யானை' படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சினம்'. இந்த படத்தில் அருண் விஜய் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  இப்படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் என்பவர்  இயக்கியுள்ளார். இப்படத்தை மூத்த நடிகர் விஜயகுமார் தயாரித்துள்ளார். 
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஷபீர் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.

<a href=https://youtube.com/embed/tT_dSAPGTI4?autoplay=1><img src=https://img.youtube.com/vi/tT_dSAPGTI4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

படத்தில் விறைப்பான காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் அருண் விஜய். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், மர்மமான முறையில் நிகழும் தொடர் கொலைகளுக்கான காரணங்களையும், கொலையாளியையும் கண்டறியும் அதிகாரியாக அருண் விஜய் களமிறங்குவதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது.