#BREAKING:- பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

 

இந்தியில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் ரன்பீர் கபூர். சமீப காலமாக தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் இந்தியில் வசூலை வாரி குவித்து வருகின்றன. இந்நிலையில் தென்னிந்தியாவை குறி வைத்து தனது படங்களை பேன் இந்தியா படமாக வெளியிட தொடங்கியுள்ளார் ரன்பீர் கபூர்.கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் ஷாம்ஷேரா என்ற படத்தில் நடித்துள்ளார் ரன்பீர் கபூர். பிரிட்டிஷ் காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையினரால் அழிக்கப்படும் ஒரு பழங்குடி இனமும் அவர்களுக்காக போராடும் ஷாம்ஷேரா என்ற பழங்குடி வீரனின் கதைதான் இந்த படம். இந்த படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரன்பீர் கபூரின் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'ஷாம்ஷேரா' படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டது. டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது ரன்பீர் கபூர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் தனது கார் விபத்துக்குள்ளானதை தெரிவித்தார். 'டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தை அடையும் போது, ​​'யாரோ தற்செயலாக தனது காரை மோதியதால், தனது கார் விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார். இருப்பினும் தனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார்.

<a href=https://youtube.com/embed/UHYUeZ8JszQ?autoplay=1><img src=https://img.youtube.com/vi/UHYUeZ8JszQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">