பிரபுதேவாவிற்கு அம்மாவாகும் நடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!! 

 

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் 'பாக்கியலட்சுமி'.இந்த சீரியலுக்கு ஏராளமாக ரசிகர்கள் உள்ளனர். இதற்குக் காரணம் இந்த சீரியலில் பாக்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா தான். கணவன் ஏமாற்றுவது கூட தெரியாமல் அப்பாவி மனைவியாக இந்த சீரியலில் நடித்து வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

இந்நிலையில் சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வரும் சுசித்ரா, தற்போது சினிமா படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தின் ஹீரோவாக பிரபல நடன இயக்குனர் பிரபுதேவா நடிக்கிறார்.  இந்த படத்தில் பிரபுதேவாவின் அம்மா கதாபாத்திரத்தில் சுசித்ரா நடித்து வருகிறார்.