விஜய் டிவியின் சீரியலில்  என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்..!! யார் தெரியுமா ?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய பிரபலமானவர் தாமரை. நாட்டுப்புற கலைஞரான இவருக்கு பிக்பாஸில் கலந்துக்கொள்ள கடந்த சீசனில் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட தாமரை, 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடிகள் உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார். இதுதவிர ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் சீரியல் ஒன்றிலும் தாமரை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தான் தாமரை என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் கண்ணம்மாவின் சித்திக்கு ஒரு தம்பி இருப்பார். அவர் எப்படியாவது கண்ணம்மாவை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார். ஆனால் கடைசியில் அது நடக்காமல் பாரதியை திருமணம் செய்வார் கண்ணம்மா. சில ஆண்டுகளாக கண்ணம்மாவின் சித்தியின் தம்பி கேரக்டர் காட்டப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் காட்டப்படவிருக்கிறார். அந்த கதாபாத்திரத்தின் மனைவியாகதான் தாமரை நடிக்கவுள்ளார்.