நெல்சனுக்கு கால் செய்து ஆறுதல் கூறிய தளபதி விஜய்.!?

 

இயக்குனர் நெல்சன் கடந்த 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குவிந்து படத்தை பார்த்து வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் சிலர் இயக்குனர் நெல்சனை தீட்டி தீர்த்து வருகிறார்கள். பலர் இதுவரை இல்லாத விதமாக விஜய்யை காட்டியுள்ளீர்கள் என நெல்சனை பாராட்டியும் வருகிறார்கள்.

இந்நிலையில், நெல்சனை பல விஜய் ரசிகர்கள் தீட்டி வரும் நிலையில், நடிகர் விஜய் நெல்சனுக்கு கால் செய்து விமர்சனங்களை பற்றி எதுவும் நினைக்காதீங்க நம்ம விரைவில் ஒரு படம் பண்ணலாம் என ஆறுதலாக பேசியதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.