ஆடை சர்ச்சை சதீஷுக்கு தர்ஷா குப்தா பதிலடி..!!
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன், பின்னர் அதையெல்லாம் கைவிட்டுவிட்டு, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். இந்நிலையில், சன்னி லியோன் தமிழில், “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ், ஜிபி முத்து, தர்ஷா குப்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சன்னி லியோன் பட்டு சேலையில் வந்திருந்தார். அதே சமயம் தர்ஷா குப்தா கிளாமர் லுக்கில் வந்திருந்தார்.
அந்த விழாவில் மேடையில் பேசிய நடிகர் சதீஷ், மும்பையில் இருந்து வந்த நடிகை சன்னி லியோன் நம் பாரம்பரிய உடையில் வந்துள்ளார், ஆனால் கோயம்புத்தூறில் இருந்து வந்துள்ள தர்ஷா குப்தாவின் டிரெஸை பாருங்கள் என்று, தர்ஷாவின் கிளாமர் டிரஸ்ஸை கலாய்த்திருந்தார்.
நடிகர் சதீஷின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியது. மி டூ விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிவரும் பாடகி சின்மயி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மூடர் கூடம் இயக்குனர் நவீன் உள்ளிட்ட பலரும் சதீஷின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததால் விவகாரம் பூதாகாரமானது.
இதையடுத்து நடிகர் சதீஷ் வெளியிட்ட விளக்கத்தில், தர்ஷா குப்தா பேச சொல்லி தான், தான் இதை பேசினேன் என கொளுத்திபோட்டார். இந்நிலையில், தர்ஷா குப்தா தான் அவ்வாறு பேசவே சொல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தர்ஷா சொல்லித்தான் தான் இவ்வாறு பேசினேன் எனக் கூறி வெளியிட்ட பதிவை. சில நிமிடங்களிலேயே சதீஷ் நீக்கிவிட்டார். இதையெல்லாம் பார்க்கும் மக்கள், “ஓ மை காட்” படத்தின் புரமோஷனுக்காக இப்படி மாறிமாறி பேசி சர்ச்சையை வளர்த்து வருகிறார்களா என சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.