தேவராட்டம் படம் ஜோடிக்கு விரைவில் டும்டும்டும்..!! 

 

முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தின்போது நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இடையே நல்ல நட்பு என்னும் மொட்டு ஏற்பட்டு, அது பின்னர் காதலாக மலர்ந்துவிட்டது.

கடந்த சில வருடங்களாக இந்த ஜோடி காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டாலும், இருவரும் மறுத்தே வந்தனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திடீரென இருவரும் தங்கள் சமூக ஊடக பக்கங்கள் மூலம் காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.

இந்நிலையில், வரும் நவம்பர் 28 ஆம் தேதி இருவருக்கும் சென்னையில் திருமணத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு இரு தரப்பிலும் இருந்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

திருமணதுக்கு பிறகு, அனைத்து திரை பிரபலங்களையும் அழைத்து தடபுடலாக வரவேற்பு விழாவை நடத்திட இருவீட்டாரும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.