தனுஷ் ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு ஸ்பெஷல் அப்டேட் காத்திருக்கு ..!! 

 

மித்ரன் ஜவஹர் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. ஏற்கனவே இந்த கூட்டணியில் யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் நான்காவது முறையாக உருவாகியுள்ள இந்த கூட்டணியின் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.  முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.