இயக்குநர் பாக்யராஜ், ஏ.எல்.உதயா நீக்கம்!!

 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

அப்போது வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டடது. அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதால், அவரால் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த மார்ச் 20-ம் தேதி நடிகர் சங்கத்தின் வாக்குகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி எண்ணப்பட்டன. அதில் நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. இதையடுத்து நாசர் விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பாக்யராஜ் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து செயற்குழு முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நடிகர் சங்க விதியின் 13-ன் படி உறுப்பினருக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக இயக்குநர் கே.பாக்யராஜ்,ஏ.எல்.உதயா இருவரையும் ஆறு மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால், சினிமா வட்டாரத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.