எஸ்.கே-க்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கர் மகள்..?  

 

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ’மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே.பிரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாராகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் துவங்கவுள்ளது.இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சத்தமே இல்லாமல் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அந்த வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளார்.