20 நாள் பட ஷூட்டிங்கிற்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ..?
Apr 16, 2022, 14:36 IST
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கோலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின். தமிழ் படங்களில் மட்டுமின்றி தற்போது அவர் பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தச் சூழலில் அவர் தனது சம்பளத்தை 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தினார். இருப்பினும் நயன்தாராவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால் அவரை தொடர்ந்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் புக் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்திலும் நயன்தாராவே கதாநாயகி என கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக அவர் தனது சம்பளத்தை ஐந்து கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.