லவ் டுடே படம் ஒடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா ?
கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லவ் டுடே. 'கோமாளி’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன 90ஸ் கிட்ஸ்களின் கதைக்களம் கொண்ட லவ் டுடேபடத்தை இயக்கியுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
படத்தின் ரிலீசுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட ட்ரெயிலர் படத்திற்கு சிறப்பான ப்ரமோஷனாக அமைந்தது.இதனால் இந்த படத்தை மக்கள் பெரிதும் ரசித்தனர் அதன் பின் இந்த படத்தை ரீமேக் செய்தனர் தெலுங்கிலும் அதிலும் மிக பெரிய வெற்றி பெற்றது அதனால் இது உலகம் முழுவதும் ஹிட் அடித்து சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காதலர்கள் இருவரும் தங்களுக்குள் மொபைல் போனை மாற்றிக் கொள்வதுதான் படத்தின் மையக் கதை. அதன் பின்னர் நடக்கும் ஊடல், காதல், சண்டைதான் மீதிப் படம்.இந்தப் படம் இதுவரை ரூ.70 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் லவ் டுடே திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.