தேசிய விருது பெற்ற நடிகைக்கு விரைவில் டும் டும் டும்..!!

 

'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத்தரவில்லை என்றாலும் தொடர்ந்து அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ, தானா சேந்த கூட்டம், அண்ணாத்த போன்ற படங்கள் இவரை பிரபலமடைய செய்தது. அதிலும் இவரது நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று தந்தது.

இந்த நிலையில் தற்பொழுது உதயநிதிக்கு ஜோடியாக  ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார், தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய இரு திரைப்படங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் அவர் ஒப்பந்தம் ஆகவில்லை என தகவல் வந்துள்ளது அதற்கு காரணம் கீர்த்திக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். சமீபத்தில் கூட கீர்த்தி பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய தாக புகைப்படங்கள் வெளியான நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது,’ஒரு வேளை அது உண்மைதானா?’ என தோன்ற வைக்கிறது.

கீர்த்தி திருமணத்திற்கு பிறகு நடிக்க போவதில்லை என்ற தகவலும் வந்துள்ளது அதனால் தான் அவர் இப்போதிலிருந்தே படவாய்பை குறைத்து வருகிறாராம்.