ஒவ்வொரு போலீஸ்காரனுக்கும் தன் வாழ்க்கையில் இப்படி ஒரு கேஸ் வரும் - வெளியான 'வதந்தி' வெப்சீரிஸ் டிரைலர்..!!
பிரபல இயக்குனர்களாக இருக்கும் புஷ்கர் - காயத்ரி, விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் படமான ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் தற்போது தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் வெளியான ‘சுழல்’ வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘வதந்தி’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளனர். இதன் மூலம் முதல்முறையாக எஸ்.ஜே.சூர்யா வெப் தொடரில் நடிக்கிறார். இந்த வெப் தொடரை ஆன்ட்ரியூ லூயிஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘லீலை’ என்ற வெப் தொடரை இயக்கியவர். இந்த படத்தில் லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த வெப்சீரிஸ் வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த வெப்சிரீஸின் சஸ்பென்ஸ் திரில்லரான டிரைலர் வெளியாகியுள்ளது.