பிரபல அவெஞ்சர் பட நடிகர் கவலைக்கிடம்..?

 

மார்வெல் அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்ததன் மூலம் இந்தியளவிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜெரமி ரெனர்.இந்நிலையில், நடிகர் ஜெரமி ரெனர் விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பனி விபத்தில் சிக்கிய நடிகர் ஜெரமி ரெனர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.சிகிச்சையில் இருந்து வரும் ஜெரமி ரெனர் மோசமான நிலையில் இருந்தாலும் தற்போது ஓரளவு பரவாயில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.