பிரபல பாலிவுட் நடிகை மும்பையில் கைது..!!
பாலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வரும் ராக்கி சாவந்த், தமிழில் ‘முத்திரை’, ‘என் சகியே’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.
2019ஆம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், கடந்த ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். சமீபத்தில், மைசூருவைச் சேர்ந்த ஆதில் கான் துரானியைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் மீது விமர்சனம் எழுப்பப்பட்டது. இந்தநிலையில், நடிகை ஷெர்லின் சோப்ரா குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக ராக்கி சாவந்த் மீது ஷெர்லின் சோப்ரா போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகார் அளித்ததின் பேரில் வழக்கை பதிவு செய்த அம்போலி பகுதியை சார்ந்த போலீசார் ராக்கி சாவந்த் கைது செய்துள்ளனர். மாடல் அழகி, பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகையுமான ஷெர்லின் சோப்ரா தனது ட்விட்டரில் , பாலிவுட் நடன கலைஞரான ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.