‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் வில்லன்..!!  

 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இடம் பெறும் ரஜினிகாந்தின் 70 சதவீத காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் 30 சதவீத காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. அதில் இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் ஒரு சண்டைக் காட்சி ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் , தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோயர் நடிக்கின்றனர். நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் அமிதாப்பச்சனை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது ஜாக்கி ஷெராப் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.