பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!! 

 

2005-ல் வெளியான ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான அவன் இல்லை, பந்தயம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2012-ல் வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதில் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் அவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகத்தை விஜய் ஆன்டனியே நடித்து இயக்கி வருகிறார்.

இசையமைப்பாளர் நடிகர் என இருந்த விஜய் ஆன்டனி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. மலேசியா, லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.