பிரபல நடிகை கொச்சின் அம்மினி காலமானார்!! 

 

1942-ல் பிறந்த கொச்சின் அம்மினி, 12 வயதில் நாடகங்களில் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து இருக்கிறார். பாடல்களும் பாடி இருக்கிறார். ‘கண்டம் பச்ச கோடி’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.  

அதனைத் தொடர்ந்து ஆதிமிகள், சரஸ்வதி, சுவிமரர் பாகயா, உன்னிர்ச்சா, வர்வேமயம், கண்ணூர் டீலக்ஸ், அஞ்சு சுந்தரிகள், இருளும் கலயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். 2011ல், 'தி ஹண்டர்' படத்தில் நஸ்ருதீன் ஷாவின் அம்மாவாக நடித்தார்.   

பின்னர் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். ‘மஞ்சில் விரிஞ்சபூகலி’ படத்திலும் பூர்ணிமா ஜெயராமுக்கு குரல் கொடுத்த இவர், சாரதா, கே.ஆர்.விஜயா, விஜயநிர்மா ஆகியோருக்கு ஆஸ்தான பின்னணி குரல் கலைஞராக இருந்தார்.

1967-ல் வெளியான 'இந்துலேகா' படத்தில் இரண்டு பாடல்களைப் பாடினார். சங்கீத நாடக அகாடமி விருது, திக்குறிச்சி நினைவு விருது, ஓ. மாதவன் விருது, ஸ்வரலயா, சர்கா மற்றும் காளிதாச கலகேந்திர பிரதிபா வந்தனா விருது, ஸ்ரீ கிருஷ்ண நாட்டிய சங்கீத அகாடமி விருது போன்ற பல விருதுகளை அம்மிணி பெற்றுள்ளார். 

இந்த நிலையில், நடிகை கொச்சின் அம்மினிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கொல்லத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கொச்சின் அம்மினி காலமானார். இவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.