8 தோட்டாக்கள் இயக்குனரை மணந்த பிரபல நடிகை..!! 

 

இயக்குநர் மிஷகினிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீகனேஷ். இவர் 2017-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து நடிகர் அதர்வா, நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கினார். இப்படத்தில் கபடி வீரராகவும், நடிகர் அஜித்தின் ரசிகராகவும் அதர்வா நடித்தார். நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீசானது.

இந்நிலையில் இயக்குநர் ஶ்ரீகணேஷ், நடிகை சுஹாசினி சஞ்சீவ் உடன் நேற்று சென்னையில் உள்ள முருதீஸ்வரர் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஸ்ரீகணேஷை வாழ்த்தி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்த நடிகை சுஹாசினி சஞ்சீவைத் தான் ஸ்ரீகணேஷ் திருமணம் செய்துள்ளார். சர்பத், வனம், சீதக்காதி உள்ளிட்ட படங்களிலும் சுஹாசினி சஞ்சீவ் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு பெரிய படங்களை இயக்கும் யோகம் அடிக்கட்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

சுஹாசினி சஞ்சீவ், தமிழ் சினிமாவில் நெஞ்சுக்கு நீதி, வனம், சர்பத், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.