பிரபல இயக்குநர் காலமானார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

 

1939-ல் இத்தாலியில் பிறந்த ருகெரோ டியோடாடோ, இயக்குநர் செர்ஜியோ கோர்பூசியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1962-ல் வெளியான தி ஸ்லேவ் மற்றும் ஜாங்கோ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன்பின், 1964-ல் வெளியான ‘ஹெர்குலஸ் ப்ரிசனர் ஆஃப் ஈவல்’ என்ற இத்தாலிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 60 ஆண்டு திரை வாழ்க்கையில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.

1980-ல் வெளியான ‘கன்னிபால் ஹோலோகாஸ்ட்’ படம் தென் அமெரிக்கக் காடுகளில் நடக்கும் மிருக பலியைப் பற்றியது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த மிக யதார்த்தமான காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்திற்காக விலங்குகளைக் கொன்றதாகக் கூறப்பட்டதற்காக டியோடாடோ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இப்படத்திற்காக உள்ளூர் நடிகர்களால் உண்மையான மிருக பலி நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்த படம் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இயக்குனர் ருகெரோ டியோடாடோ கடந்த டிசம்பர் 29-ம் தேதி ரோம் நகரில் இறந்ததாக இத்தாலிய நாளிதழான ‘Il Messaggero’ தகவல் வெளியிட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.