திடீரென திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி..!! 

 

பிரபல சின்னத்திரை நடிகை ஏகவல்லி அபூர்வராகம், தென்றல், கேளடி கண்மணி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் சகோதிரி யமுனாவும் ஒரு சின்னத்திரை நடிகை தான். யமுனா சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜெயா டிவியில் பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஏகவள்ளி மதம் மாறி விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சின்னத்திரை நடிகர் பெரோஸ்கானை, கடந்த சில ஆண்டுகளாக ஏகவல்லி காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ளவே மதம் மாறியதாக தகவல்கள் பரவின.

தற்போது நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெரோஸ்கான் மற்றும் ஏகவல்லி  திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான அம்ருத் கலாம் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அம்ருத் கலாம் இது குறித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், பெரோஸ்கான்-ஏகவல்லி ஜோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, அதில் ”ஸ்வீட் அண்ட் சிம்பிள் திருமணம்” என கேப்ஷன் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ஏகவல்லி, ”சாட்சி கையெழுத்துக்கு நன்றி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். எனவே இவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டது நடிகர் அம்ருத் கலாம் தான் என்பது தெரிய வந்துள்ளது.