ரசிகர்கள் உற்சாகம்..!! இன்று வெளியாகிறது சிவகார்த்திகேயன் படத்தின் ட்ரைலர்..!! 

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கதாநாயகி மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி,  பிரின்ஸ் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.