ரசிகர்கள் அதிர்ச்சி..!! ஹாரி பாட்டர் ‘ஹாக்ரிட்’ ராபி கோல்ட்ரேன் காலமானார்..!!

 

1950-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தவர் நடிகர் ராபி கோல்ட்ரேன். இவர் 1980-ல் வெளியான ‘ஃப்ளாஷ் கார்டன்’ படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு ஆர் யூ பியிங் சர்வ்?, க்ரூல் அண்ட் பிரிட்டானியா ஹாஸ்பிடல் உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறிய தோற்றங்களில் நடித்தார், அவரது தனித்துவமான தோற்றம் மற்ற நடிகர்களிடம் இருந்து தனித்து நிற்க உதவியது. 

அதையடுத்து ‘ஆல்பிரெஸ்கோ’ என்ற ஸ்கெட்ச் தொடரில் ஹக் லாரி , ஸ்டீபன் ஃப்ரை மற்றும் எம்மா தாம்சன் ஆகியோருடன் இணைந்து தனது தொலைக்காட்சி தொடர் வாழ்க்கையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். 1987-ல் பிபிசியின் ‘டுத்தி புருத்தி’ தொடரில் தாம்சனுடன் இணைந்து நடித்தார். அதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தனது முதல் பிரிட்டிஷ் அகாடமி தொலைக்காட்சி விருதைப் பெற்றார். 

அதன்பின் 1990-ல் ‘கிராக்கர்’ என்ற தொலைக்காட்சி தொடரில் டயவியல் உளவியலாளர் டாக்டர் எட்வர்ட் "ஃபிட்ஸ்" ஃபிட்ஸ்ஜெரால்டாக நடித்தார். இதில் நடித்ததற்காக அவருக்கு 3  பாஃப்டா விருதுகளை வென்றது. தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ‘கோல்டன் ஐ’ மற்றும் தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

அதன்பின், ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவாலை மையப்படுத்தி வெளிவந்த இந்த சீரிஸில் நடித்த பல கதாபாத்திரங்களுக்கும் உலகம் முழுவதும் தனித்தனி ரசிகர்கள் உள்ளனர். ஹாரி பாட்டர், ஹெர்மாயினி, ரான் வீஸ்லி, டம்பிள் டோர் என பல முக்கியக் கதாபாத்திரங்களும் கிளைக்கதைகளும் கதைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த சீரிஸில் அமைந்திருக்கும்.

அந்த வகையில் இப்படங்களில் முதல் பாகத்தில் இருந்து பயணிக்கும் முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள  இவரது எண்ணற்ற ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.