சோகத்தில் திரையுலகம்..!! பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்!!

 

மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் சதீஷ் பப்பு. இவரை அனைவரும் செல்லமாக பப்பு என்று அழைத்தனர். இவர் 2001-ல் வெளியான ‘சாந்தினி பார்’ என்ற மலையாள படத்தின் மூலம் உதவி ஒளிப்பதிவாளராக பயணத்தை தொடங்கினார். 

அதன்பின் 2012-ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘செகண்ட் ஷோ’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கூதரா, ரோஸ் கிடாரினால், ஈனா, நான் ஸ்டீவ் லோபஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக அப்பன் என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், சுதீஷ் அமிலாய்டோசிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அமிலாய்டோசிஸ் என்ற புரதத் திரட்சி தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த புரதத் திரட்சி தசை நோயால் சிறுநீரகம் மற்றும் இருதயம் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடல், அகச்சுரப்பிகள், கண்கள், தோல் மற்றும் நரம்பு மண்டலத்தையும் இந்நோய் பாதிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமிலாய்ட் பைப்ரில்ஸ் எனும் அசாதாரண புரதங்கள் திசுக்களில் உருவாவதால் இந்நோய் ஏற்படுகிறது.

மில்லியன் மக்களில் 3 - 13 நபர்கள் இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். நோய் பாதித்த 1000-ல் ஒருவர் இறக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு கடந்த 14-ம் தேதி காலமானார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சதீஷின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.