சந்தானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!!
 

 

மேயாத மான், ஆடை படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இதற்கு அடுத்தாக சந்தானம் நடிப்பில் `குலு குலு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதுதவிர சந்தானம் நடித்த `ஏஜென்ட் கண்ணாயிரம்' படமும் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.