ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்..!! 

 

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக என்ட்ரி ஆகி அதன் பின் முக்கிய நடிகர் மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்ஜே பாலாஜி. இவரது இயக்கத்தில் வெளியான ’எல்கேஜி’ ’மூக்குத்தி அம்மன்’ மற்றும் ’வீட்ல விசேஷம்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

 இந்த வெற்றி வரிசையில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.இந்த படத்தை ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்க உள்ளார் .இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தற்பொழுது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளார் . போஸ்டரில் ஆர் ஜே பாலாஜி கையில் கத்தரிக்கோலுடன் சலூன் கடையில் இருபது போல போஸ்டர் வெளியிட்டு உள்ளனர்.மேலும் இந்த படத்தில் லோகேஷ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .