அஜித்தின் துணிவு படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதா..? உண்மை நிலவரம் இது தான்..!!  

 

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்பட தமிழக வெளியீட்டு உரிமத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து வாரிசு படத்திற்காக தியேட்டர்களை புக் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது 7 ஸ்க்ரீன் நிறுவனம். தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இதே நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், பொங்களுக்கு 8 வருடங்களுக்கு பின்னர் விஜய் மற்றும் அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளது.துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவீ தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது அதற்காக 800 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது ‘துணிவு படத்திற்கு இதுவரையில் எந்த ஒரு தியேட்டர்களும் ஒதுக்கவில்லை என்றும் அப்படி வெளியான தகவல் முற்றிலும் வதந்தி' என்றும் தெரிவித்தார்.