நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு..!! 

 

நடிகர் சூர்யா நடிப்பில் ‘ஜெய்பீம்’ படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. த.செ.ஞானவேல் இயக்கிய இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்தநிலையில், இந்த திரைப்படத்தில் வன்னியர்களின் மனதை புண்படுத்தியதாக வன்னியர்கள் சங்கம் குற்றம்சாட்டியது. மேலும் உண்மைக் கதையான இந்த சம்பவத்தில் உண்மைக்கு மாறாக வேண்டுமென்றே சித்தரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், இந்த படத்தின் வில்லனாக வரும் எஸ்.ஐ. பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர். உண்மைக் கதையில் அவரது பெயர் அந்தோணி சாமி. இப்படி பெயரை மாற்றியது மட்டுமல்லாமல் அந்த வில்லன் வீட்டில் வன்னியர்களின் அக்னி கலசம் பொதித்த காலண்டர் இருப்பதாகக் காட்டியதும் சர்ச்சையானது.

இந்த பிரச்சினை தொடர்பாக ருத்ர வன்னிய சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் நாயக்கர் வழக்குப்பதிவு செய்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வேளச்சேரி காவல் நிலையத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு தொடரப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கு எதிரான நடவடிக்கையை தடைசெய்ய வேண்டும் என நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் தரப்பில் தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குரிய நாள்காட்டி நீக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று அமலுக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கு குறித்து புகார்தாரர், போலீசார் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 21 தேதி தள்ளி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.