பிரபல இசையமைப்பாளருக்கு கவுரவ டாக்டர் பட்டம்..!!

 

2011-ம் ஆண்டு விஜய் நடித்து வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து சில படங்களில் இசையமைத்து வந்தாலும், ஆரம்பக்கட்டத்தில் அவரின் இசைக்கு போதிய வரவேற்பு இல்லை. இதையடுத்து அவர் இசையமைத்த ‘மைனா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் அவர்‌ இசையில் உருவான ‘கும்கி’ படம், டி இமானை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து அவர்‌ இசையமைத்த அனைத்து திரைப்படங்களும் ஹிட் அடித்தது. குறிப்பாக வெள்ளக்கார துரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரோமியோ ஜூலியட், மிருதன் போன்ற பெரிய அளவில் வெற்றிப்பெற்றன. 

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்திற்கு இசையமைத்து மாநில அரசின் விருது பெற்ற இவர், அதன்பிறகு அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்து தேசிய விருது பெற்றார் ....

இமானுக்கு இசைத்துறையில் செய்து வரும் சாதனைக்காக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்த தகவல் மற்றும் சான்றிதழை வெளியிட்டுள்ள இமான், ‛அனைவரின் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி' என்று பதிவிட்டு இருக்கிறார்.