எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை விழுந்து விழுந்து சிரித்தேன் - உதயநிதி ஸ்டாலின் 
 

 

உதயநிதி ஸ்டாலின் தற்போது கழகதலைவன், மாமன்னன் ஆகிய திரைப்படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதில் கழகதலைவன் திரைப்படம் வரும் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் ஒரு காமெடியான சம்பவம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ” நான் சமீபத்தில் ஒரு கல்யாண வீட்டிற்கு சென்றிருந்தேன். எங்களுடைய கட்சி காரருடைய கல்யாணம் தான். கல்யாணத்தை நடத்தி வைப்பதற்காக நான் சென்றிருந்தேன்.

அப்போது ஒரு சின்ன பையன் வந்தான். அவரோட அப்பா அவனை கூப்பிட்டு வந்தாரு. என்னை பார்த்தவுடன் அந்த பயனோட அப்பா இந்த மாமா யாருனு சொல்லு -னு கேட்டாரு அதற்கு அந்த பையன் போட்டோகிராபர் என்று சொல்லிவிட்டான். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை விழுந்து விழுந்து சிரித்தேன் . பிறகு அவனோட அப்பா உங்களுடைய நிமிர் படம் நிறைய வாட்டி பார்த்திருக்கிறான் சார் அதான் அப்டி சொல்றான் என சொன்னார்” என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

<a href=https://youtube.com/embed/1z5Srx8G9v4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/1z5Srx8G9v4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">