இது யாரு செஞ்ச வேலை தெரியல..!! நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக பயணித்துக் கொண்டிருப்பவர் பார்த்திபன். இயக்குனர், நடிகர் என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். வித்தியாசமான இயக்குனராக அறியப்படும் சமீப காலமாக இயக்கிய திரைப்படங்கள் அதிக கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் அவர் இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து 'இரவின் நிழல்' என்ற படத்தை எடுத்திருந்தார். இந்த படம் உலகின் முதல் ந்ன் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று பரபரப்பு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தனது ஸ்டைலில் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். அதில் நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.