ஒடிடியில் வெளியானது நானே வருவேன்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!! 

 

தமிழ் சினிமாவின் ஹிட் கூட்டணி  என குறிப்பிட்டு சொல்லும்படி சில காம்போ இயக்குநர் , நடிகர்கள் இருக்கிறார்கள்.  உதாரணமாக  வெற்றிமாறன் - தனுஷ்,  சிறுத்தை சிவா - அஜித், அட்லி - விஜய் என சில காம்போக்கள் எப்போதும் வொர்க்கவுட் ஆகிவிடும்..  அந்தவகையில் கண்ணை மூடிகொண்டு சொல்லும் அளவிற்கு ரசிகர்களிடம் பரிட்சயமானவர்கள் தான்  தனுஷ் - செல்வராகவன் கூட்டணி.  

இந்தக் கூட்டணியில் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே  கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள  திரைபடம்  ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நானே வருவேன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இந்த படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இடைவேளைக்கு முந்தைய காட்சி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்படம் இன்று ஒடிடி-யில் வெளியானது .இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் இன்றுமுதல் இந்த படத்தை பிரைம் வீடியோதலத்தில் பார்க்கலாம்