தமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்று மாநிலங்களவை உறுப்பினரானார் இளையராஜா..!!

 

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தர்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 

இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 18-ம் தேதி பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்று இளையராஜா பதவியேற்கவில்லை. அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால், இளையராஜா அக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என தகவல்கள் வெளியாகியது. 

இந்நிலையில், நேற்று (ஜூலை 25) பிற்பகல் மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் மாநிலங்களவைத் துணைத் தலைவர் முன்பு மாநிலங்களவை நியமன உறுப்பினராக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். 

மாநிலங்களவை நியமன உறுப்பினரான இளையராஜா தமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.