ரௌடி பேபி சத்யா பிக் பாஸ் 6ல் போட்டியாளரா..?

 

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் தமிழிலும் 5 சீசன்கள் வரை சென்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகநாயகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்ததும் இதற்கு முக்கியக் காரணம். கடந்த 5 சீசன்கள் கமல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். 

இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துக்கொள்ள புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர சின்னத்திரை பிரபலங்கள், டிவி தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர் என பல பிரபலங்கள இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். 

 பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்க போவதாக தகவல் வந்துள்ளது.பிக்பாஸ் ஆறாவது சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள் அதில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CINEMA NEWS

பிக் பாஸ் 6ல் போட்டியாளராக வரும் ஜீ தமிழ் சேனல் சீரியல் நடிகை ..?

By

Priya

Published on September 20, 2022

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பு இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கொண்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 6வது சீசனுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் முதல் அறிவிப்பு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது, அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் செப்டம்பர் மாத இறுதியில் திரும்பி வந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் ஆறில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார்.அதே சமயம் இந்தியன் 2 பட ஷூட்டிங் தற்பொழுது தொடங்கி விட்டாலும் பிக்பாஸ் இந்த எதிர்பார்த்த தேதியை விட தள்ளிபோகி உள்ளது.

மேலும் இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்க போவதாக தகவல் வந்துள்ளது.பிக்பாஸ் ஆறாவது சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள் அதில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் சத்யா சீரியலில் நடித்து வரும் ஆயிஷா பிக் பாஸ் 6ல் போட்டியாளராக வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. சத்யா 2 சீரியல் விரைவில் முடிய இருக்கும் நிலையில், அதை முடித்த கையேடு அப்படியே அவர் பிக் பாஸ் 6ம் சீசன் வீட்டுக்கு போகிறார் என கூறப்படுகிறது.